ஆசியர்களுக்கு ரூ.14 லட்சம்
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ஆசிரியர்களுக்கு 6 லட்சம் ரூபாய் முதல் 14 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும்.
ஆசிரியர்கள் தங்கள் முக்கிய செலவான திருமணம் செய்யவும், புதிய பைக் மற்றும் கார் வாங்கவும் கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் அரசே கடன் வழங்வதால் மிகவும் குறைவான வட்டியே விதிக்கப்படும். அதனால் திருமணம் உள்ளிட்ட முக்கிய செலவுகளுக்கு அதிக சதவீத வட்டிக்கு ஆசிரியர்கள் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல் கார், பைக் ஆகியவை வாங்கும்போது தனியார் ஃபைனான்சியர் மூலம் பணம் பெற்று வாங்கினால் அதிக வட்டி இருக்கும். ஆனால் அரசின் கடன் திட்டம் மூலம் வாங்கும்போது மிகவும் குறைவாகவும் சேமிப்பும் மிச்சமாகும் .
Tags :