உக்ரைன் எல்லையில் சிக்கிய 6 ஆயிரம் இந்தியர்களை மீட்க உதவிய ஹங்கேரி பிரதமருக்கு மோடி நன்றி

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனுடன் தொலைபேசி மூலம் பேசிய பிரதமர் மோடி 6000 இந்தியர்களை பத்திரமாக மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.
உக்ரேன் ரஷ்ய விவகாரம் குறித்து இரு நாடுகளும் போரை கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்துவது குறித்தும் பிரதமர் மோடி ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனுடன் பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் விரும்பினால் தங்கள் மருத்துவ படிப்பை ஹங்கேரியில் தொடரலாம் என பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்ததாக செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்
Tags :