இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

by Admin / 19-12-2025 06:08:13pm
இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இன்று தலைமைச் செயலகத்தில் மதியம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு தயாரிக்கப்பட்டது. பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்க  டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 2026 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .இந்த சிறப்பு திருத்தத்தில் ஒரு பகுதியாக இறந்தவர்கள் ,இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன .சென்னையில் மட்டும் சுமார் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்.  வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் அல்லது கைபேசி செயலி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6 திருத்தங்களுக்கு படிவம் 8  பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories