இரண்டு நாய் இனங்களுக்கு நாளை முதல் தடை- சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிட்புல், ராட்வீலர் இரண்டு நாய் இனங்களுக்கு புதிய உரிமம் வழங்குவதை நாளை முதல் தடை செய்துள்ளது. நாளை முதல் இந்த இரண்டு நாய் இனங்களை புதிதாக வாங்குவதற்கோ அல்லது வளர்ப்பதற்கோ புதிய உரிமங்கள் வழங்கப்படாது என்றும் தற்போது உள்ள உரிமங்களும் புதுப்பிக்கப்படாது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. தடையை மீறி இந்த நாய்களை புதிதாக வாங்கினாலோ அல்லது உரிமம்இன்றி வளர்த்தால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் மிதிக்கப்படும் என்றும் ஏற்கனவே சட்டபூர்வமாக உரிமை பெற்று வளப்பவர்கள் தங்கள் நாய்களை தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம் என்றும் அவைகளை பொது இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது முக கவசம் மற்றும் கழுத்து பட்டை அணிந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்த விதிகளை மீறினால் 5,000 அவராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Tags :


















