மும்பைமகாயுதி கூட்டணி மாநகராட்சி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைவெளியிடப்பட்டது
இன்று மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக் நாத் ஷிண்டே ஆகியோர் மகாயுதி கூட்டணி சார்பாக வெளியிடப்பட்டது. இத்தேர்தல் அறிக்கையில், மும்பை நகரை முழுவதும் காங்கிரீட் மயமாக்கி குடிசைகள் அற்ற மும்பையாக மாற்றப்படும் என்கிற உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. குடிசை பகுதி மறுவாழ்வு ஆலயத்தின் மூலம் 30 முதல் 35 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்குவதோடு அவர்களுக்கு 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டவிரோத வங்கதேச மற்றும் ரோஹிங்கியா ஊடுருவக்காரர்களை கண்டறிந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் .மாசு இல்லாத நகரமாக மாற்ற ரூபாய் 17,000 கோடி முதலீடு செய்யப்படும்மராத்தி மொழி மும்பைற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பள்ளி பாடத்திட்டத்தில் மும்பை மற்றும் சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் வரலாறு சேர்க்கப்படும் என்கிற அறிவிப்புக்கள் அறிக்கையில் இடம் பெற்று இருக்கின்றன. மகாராஷ்டிராவில் மும்பை உள்பட 29 மாநகராட்சி தேர்தல் ஜனவரி 15, 2026 அன்று நடைபெற உள்ளது. மறுநாள் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Tags :



















