நம்ம ஊரு மோடி பொங்கல் பா. ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதி நவீன் தலைமையில்.....
இன்று கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் கோவை மாநகர பாஜக சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயல் தலைவர் நிதி நவீன் தலைமையில் நடந்தது. என் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் நிதி நவீன் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி ,சட்டை மற்றும் துண்டு அணிந்து விழாவில் பங்கேற்றதோடு, பொங்கல் பானையில் வெல்லம் இட்டு பொங்கலோ பொங்கலோ என்று முழக்கமிட்டு பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார். இவ்விழாவில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ,சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொள்ள..... பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வானதி சீனிவாசன் தமிழிசை சவுந்தரராஜன் வள்ளி கும்மி ஆட்டம் ஆடினர்.இதற்கு முன்னதாக நிதின் நவீன் நிதி நவீன் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் மருதமலை முருகன் கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார்.
Tags :
















.jpg)


