மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மேலாளர்

by Staff / 12-11-2022 11:45:42am
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மேலாளர்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவியை அதே பள்ளியை சேர்ந்த மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார். பள்ளி மேலாளரின் அத்துமீறலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த விஷயத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையறிந்த பள்ளி மேலாளர் ஷஹாதத், தனது வீட்டில் இருந்து தலைமறைவானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஷஜாதத்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories