நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 16 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபர் கைது.

திசையன்விளை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 1998- ம் வருடம் அரசு பேருந்தை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ்(43) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மைக்கேல் ராஜ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து ஜாமினில் வெளிவந்தார். பின்னர் எதிரி நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 16 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், மைக்கேல் ராஜ்க்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேற்படி எதிரியை திசையன்விளை காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் 25.04.2023 இன்று கைது செய்து பிடியாணை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Tags :