புத்திரகாமேஷ்டி யாகம் தொடங்கியது.

by Admin / 10-11-2022 09:44:49pm
புத்திரகாமேஷ்டி யாகம் தொடங்கியது.


புத்திரகாமேஷ்டி விரதம் வெகு சிறப்பாக முனிவர்களின் முன்னிலையில் தொடங்கியது.வேள்வி நிறைவுறும் தருவாயில்,அக்னியிலிருந்து தேவன் ஒருவன் தோன்றி..வெளியே வந்தான்.அவன் கையில் ஒரு பொற்கிண்ணம் இருந்தது.அவன்தசரதனிடம் சென்று அந்த கிண்ணத்தை கொடுத்து மறைந்து போனான்.

அக்கிண்ணத்தில் அமுது இருந்தது.அதைப்பெற்ற தசரதன் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தான்.அமுதை தம் மூன்று மனைவிகளுக்கும் தந்தார்.அவர்கள்பருகினர்.வேள்வியின் சிறப்பால் மூவரும் கருவுற்றனர்.பத்துமாதம் நிறைவுற்றதும் கோசலை ஸ்ரீராமனையும் கைகேயி
பரதனையும் சுமத்திரை இலக்குவனையும் சத்ருகனனையும் பெற்றனர்.

நான்கு மகன்கள் பிறந்ததால் தசரத சக்கிரவர்த்திமிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தார்.நால்வரும் அறிவிலும் ஆற்றலிலும்  சிறந்து விளங்கினர்.ராமனும்லட்சுமணனும் பரதனும்சத்ருக்கனனும் இணைபிரியா இரட்டையர்களாக த்திகழ்ந்தனர்.வசிஷ்டரின் குருகுலத்தில் நால்வரும்கல்வி கற்றதோடு நற்பண்புகளையும் பெற்று வளர்ந்தனர்.மன்னர் குலத்திற்கு தேலையான போர்க்களப்பயிற்சியான வில்,வாள்வீச்சு போன்றகலைகளையும் கற்றனர்.

அன்பு,மரியாதை,இரக்கம்,பொறுமை முதலிய பண்புகளை இயல்பாக பெற்றனர்.இதனால்எல்லோராலும் நேசிகப்பெற்றனர்.மூத்த மகன் ராமன் மீது தசரதலுக்கு அளவில்ல அன்பு...காலம் மெல்ல..மெல்ல..நகர்ந்தது.

தசரதன் அமைச்சர் சகாக்களுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.ஒரு நாள்மந்திர் சபை ராஜமண்டபத்தில் சக்கரவர்த்தி தம் அமைச்சசருடன் கலந்து ஆலோசித்துக்கொண்டிருக்கையில்,வாயில்காப்போன் ஒருவன் வந்து,வாயிலில்  முனிவர் விசுவாமித்ரர்  உங்களைக்காண  வந்திருக்கிறார்என்கிறான்.

             -  தொடரும்

 

Tags :

Share via