by Staff /
13-07-2023
12:15:39pm
தலைநகர் டெல்லியில் பெய்து வரும் மழை மட்டுமின்றி, ஹரியானா மாநிலத்தின் மேல்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் யமுனை நதியின் வெள்ளம் டெல்லி நகருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தை கூட்டியுள்ளார். யமுனை நதியின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவிற்கு 207.55 மீட்டராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1978ஆம் ஆண்டில் நீர்மட்டம் 207.49 மீட்டராக பதிவாகி இருந்தது.
Tags :
Share via