பாஜகவை எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

by Staff / 11-05-2024 02:56:39pm
பாஜகவை எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

பா.ஜ.கவை எதிர்த்து நாடு முழுவதும் நான் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என சிறையில் இருந்து வெளிவந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆம் ஆத்மி கட்சியின் நான்கு தலைவர்களை மோடி சிறைக்கு அனுப்பினார். கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்துவிட்டால் கட்சியை அழித்துவிட முடியாது. சூழ்ச்சிகளை முறியடித்து ஆம் ஆத்மி கட்சி தற்போது புதிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊழலை முறியடிப்பதாக கூறும் பிரதமர் மோடி, ஊழல்வாதிகள், பாலியல் குற்றவாளிகளை கட்சியில் சேர்த்துள்ளார். சர்வாதிகாரி போல் செயல்படும் பிரதமர் மோடியிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo