யோகி ஆதித்யநாத் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வருவேன் என கூறினேன் அதன்படியே வந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே குறிக்கோள் ‘ஒரு நாடு, ஒரே தலைவர்’ என்பது தான்
என சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றைய பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களின் அரசியல் வாழ்வை முடித்து வைத்தவர். மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தின் அரசியல் வாழ்வை முடித்து விடுவார் என கூறியுள்ளார்.
Tags :