தி.மு.க.பீகார் மக்களைத் துன்புறுத்துவதாக பிரதமா் நரேந்திரமோடி குற்றச்சாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு
 
 
                          பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சாப்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் பீகார் மக்கள் குறித்து அவதூறாகப் பேசுவதாகவும், அதேபோல் திமுகவும் தமிழகத்தில் உள்ள பீகார் மக்களைத் துன்புறுத்துவதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த காலங்களில், தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்திகள் பரவியபோது, அது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவங்களை மனதில் வைத்து மோடி இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்..மோடியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த கால வதந்திகளின் போது, திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது..
Tags :



















