மாணவர்கள் இடைநிற்றலுக்கு சமூக பொருளாதார காரணங்கள் அடிப்படையாக உள்ளதாகஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழிவிளக்கம்

by Admin / 24-03-2023 12:18:13pm
மாணவர்கள் இடைநிற்றலுக்கு சமூக பொருளாதார காரணங்கள் அடிப்படையாக உள்ளதாகஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழிவிளக்கம்

மாணவர்கள் தேர்வெழுதாதது குறித்து சட்டப்பேரவையில் பள்ளிகள் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழிவிளக்கம் கொரோனாவுக்கு முன்னும் பின்னும் என பல சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே பல மாணவர்கள் கிட்டத்தட்ட 47 ஆயிரத்து 943 மாணவர்கள் மொழி தேர்வை எழுதாதற்க்கு காரணமாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார் மாணவர்கள் இடைநிற்றலுக்கு சமூக பொருளாதார காரணங்கள் அடிப்படையாக உள்ளதாகவும்   வரும் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு எழுத ஒரு மாணவர்கள் குறைந்தபட்சம் வருகைப்பதிவு 75% பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்துள்ளதாகவும் தேர்வு எழுதாத  மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்க குழு வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பள்ளி மேலாண்மை  குழுவிற்கு மாணவர்களின் பட்டியல் வழங்கப்பட்டு துணை தேர்வு குறித்த ஆலோசனையும் வழங்கப்படும் என்றும் துணை தேர்வு எழுத ஆலோசனை வழங்க பள்ளி அளவில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒரு வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் தலைமை ஆசிரியர் மூலம் அந்த மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் தொடர்ந்து இன்றைக்கு நீங்கள் சமூக பொறுப்போடு நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்கின்றீர்கள் அதேபோன்று நானும் பதிலை சொல்லி இருக்கேன் என்று சொல்லும்பொழுது நான் குறிப்பாக வைக்கின்ற அந்த வேண்டுகோள் என்பது பத்திரிகைத்துறை சார்ந்திருக்கின்ற நண்பர்களுக்கும் அதே போன்று பெற்றோர்களுக்கும் எங்களுடைய ஆசிரியர்கள் உங்கள் வீடு தேடி வந்து பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புங்கன்னு சொன்னா தயவு செய்து அவர்களிடம் கோபித்துக் கொள்ளாதீர்கள் இந்த பிள்ளைங்க இந்த வயசுல பணம் சம்பாதிக்கிற பணத்தை பார்த்துட்டாங்கனா ஒழுக்கத்தை கற்றுத்தருவது என்பது மிகவும் சிரமமாக இருக்கும் ஆக  அந்த வகையில்  இன்றைக்கு  நம்முடைய தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் சொல்லும்  பொழுது  மதிப்பெண்  வாங்குவது  நம்முடையவாழ்க்கை மதிப்பீடு  செய்யாது  திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள் இன்றைக்கு நாங்கள் இது  போன்ற  மாணவர்களின்  ஊக்கப்படுத்த  வேண்டும்  ஏதாவது  வேலைக்கு போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இதை  நாங்கள் செயல்படுத்திக்  கொண்டிருக்கின்றோம்..  அதற்காகத்தான் நான் ஒருவன்  திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்ற தயவு செய்து பிள்ளைகளை நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வையுங்கள் அதை பார்த்துக் கொள்ளுங்கள் அந்த பொறுப்பு எங்கள் அனைவரின் பொறுப்பு என்று சொல்லி இந்த விளக்கம் போதும் என்று சொல்லி வணக்கம்

 

Tags :

Share via