சென்னை காசிமேட்டில் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

by Staff / 15-05-2023 04:48:45pm
சென்னை காசிமேட்டில் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

சென்னை காசிமேடு பகுதிக்கு உட்பட்ட மீன்விற்பனை செய்யப்படும் பழைய ஏலக்கூடம் அருகே இருந்த குப்பைகளில் தீடீரென தீ பற்றி இருந்தால் அருகில் இருந்த கட்டு மரங்கள் தீயில் இருந்து நாசமாயின. குப்பைகளிலூம் தெர்மாகோல்களிலும் பற்றிய இந்த தீயானது அருகாமையில் பழுதடைந்து சரிசெய்யப்பட்டு வருவதாக கூறப்படும் இரு பைபர் படகிலும் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு விசைப்படகிலும் தீயானது பரவியதில் இரண்டு பைபர் படகுகளும் தீயில் எரிந்து நாசமாகியது.குப்பைகளும் தெர்மா கோல்களும் அதிக அளவில் இருப்பதனால் அதில் பிடித்த தீயினால் கரும்புகைகளானது வானுயுர்ந்த அளவில் வெளியானது. உடனடியாக அங்கிருந்த மீனவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கவே தண்டையார்பேட்டை இராயபுரம் திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.வெயிலின் காரணமாக தீப்பற்றியதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து விட்டு சென்றனரா மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories