விமானத்தில் ஒலித்த தமிழ் கவிதை.. அசத்திய விமானி

by Staff / 15-05-2023 04:51:49pm
விமானத்தில் ஒலித்த தமிழ் கவிதை.. அசத்திய விமானி

தமிழகத்தில் பறக்கும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் செய்யப்படுவது இல்லையே என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு. இந்நிலையில், விமானத்தில் விமானி விக்னேஷ் அம்மா குறித்த கவிதை சொல்லி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழில் கவிதை எழுதி பயணிகள் முன் விமானி பிரிய விக்னேஷ் வாசித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் விமானி விக்னேஷ் கவிதையை பாராட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo