மீண்டும் துருக்கி அதிபரானார் எர்டோகன்
துருக்கி அதிபர் தேர்தலில் தையிப் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவர் 52 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெமாலுக்கு 48 சதவீத வாக்குகள் கிடைத்தன. எர்டோகன் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் துருக்கியின் பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்துள்ளார். நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, பெரும் நாசத்தை சந்தித்த அந்த நாடு படிபடியாக மீண்டு வருகிறது.
Tags :