தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மார்ச் 17ஆம் தேதி அன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

by Admin / 13-03-2026 12:11:00am
 தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மார்ச் 17ஆம் தேதி அன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மார்ச் 17ஆம் தேதி அன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் .திமுக ஆட்சியில் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் மற்றும் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். மார்ச் 17ஆம் தேதி அன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதிமுக தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக அரசின் மீது நிகழ்கால குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக போராட்டத்தில் இறங்கி உள்ளது..

 

Tags :

Share via