துணை முதலமைச்சருடன் பிரான்ஸ் தூதர் சந்திப்பு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத் தூதர் சாமுவேல் டுக்ரோகே மரியாதை நிமித்தமாக இன்று (ஏப்., 17) சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags :



















