சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்.

by Editor / 17-11-2023 07:59:01am
சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்.

குற்றால அருவிகரையில் கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க இருமுடி அணிந்து செல்பவர்கள். இன்று கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஆறுகள், அருவிகளில் நீராடிவிட்டு பல்வேறு கோவில்களில் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

இன்று அதிகாலை 2 மணிமுதல் ஏராளமான பக்தர்கள் குற்றாலம் பேரருவியில் குவிந்தவண்ணம் இருந்தனர்.பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 3- 4 மணிக்கு குற்றால அருவிகளில் புனித நீராடிய பக்தர்கள் குருசாமி தலைமையில்  அப்பகுதியில் உள்ள தீர்த்தவாரி விநாயகர் கோவிலில் மாலை அணிந்துக்கொண்டனர். சிறுவர்களும் கன்னிசாமிகள் ஏராளமானோரும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். செண்பக விநாயகர் அம்பலவாண  விநாயகர், சாஸ்தா கோவில்களில் பூஜை செய்து மாலை அணிந்தும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.தொடர்ந்து குற்றால நாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து சென்ற வண்ணம் இருந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 41 விரதம் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜைக்காகவும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 41 நாள் விரதத்தை தொடங்கினர்

 

Tags : சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்.

Share via