வன்னியர் இட ஒதுக்கீடு உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவரம்.

by Editor / 02-11-2021 08:35:52pm
வன்னியர் இட ஒதுக்கீடு உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவரம்.

1. உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், அதற்கான தரவுகள் தேவை. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 
எந்தவிதமான தரவுகளும் இன்றி, குறுகிய காலத்திற்குள், 
இந்தச் சட்டத்தை இயற்றி உள்ளனர். 

2. முறையாக சாதிவாரிக் கணக்கு எடுத்த பின்னரே 
இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

3. அரசு அமைப்புச் சட்டப்படி, 
இட ஒதுக்கீட்டில், தன் விருப்பம்போல முடிவு எடுக்கும் அதிகாரம், 
மாநில அரசுகளுக்கு இல்லை. 

4. மக்கள் தொகையை மட்டும் காரணமாகக் காட்டி, 
உள் ஒதுக்கீடு வழங்க முடியாது.

5. இதர 115 சமுதாயத்தினரை விட, வன்னியர் சமுதாயத்தினர் பின்தங்கி இருக்கின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம்? 

6, வன்னியர்களுக்கு மட்டும் 10.5 விழுக்காடு ஒதுக்கினால், 
அது, இதர 115 சமூகங்களுக்கு எதிரானது. 

7. இந்த வழக்கில் நீதிமன்றம் எழுப்பிய  கேள்விகளுக்கு, தமிழ்நாடு அரசுத் தரப்பில் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. 

எனவே, வன்னியர்களுக்கு 
10.5 உள் ஒதுக்கீடு வழங்கத் தடை விதிக்கப்படுகின்றது.

 

Tags :

Share via