கனிமொழி எம்.பி. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆகிறார்.

by Staff / 07-10-2022 03:51:59pm
கனிமொழி எம்.பி. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆகிறார்.

9-ந்தேதி கூடும் தி.மு.க. பொதுக்குழுவில் துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட நியமன பதவிகளுக்கு யார்-யார் நியமிக்கப்படுவார்கள் என்ற விவரமும் வெளியிடப்படும். தற்போதைய சட்ட விதிகளின் படி 5 பேர் துணை பொதுச்செயலாளர்களாக இருக்கிறார்கள். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். அரசியலில் இருந்து விலகி கொள்வதாகவும் அறிவித்துள்ளார். இதனால் மகளிருக்கான ஒதுக்கீட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக தி.மு.க. மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி. தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

 

Tags :

Share via

More stories

Logo