ஓலா, உபெர், ரேபிடோ ஆட்டோ சேவைகளுக்கு தடை

by Staff / 07-10-2022 03:49:27pm
ஓலா, உபெர், ரேபிடோ ஆட்டோ சேவைகளுக்கு தடை

ஓலா, உபெர் மற்றும் ரேபிடோ உள்ளிட்ட ஆப்-அடிப்படையிலான கேப் மற்றும் பைக் ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா மாநில அரசாங்கத்தால் "சட்டவிரோதம்" என அறிவிக்கப்பட்டு அடுத்த மூன்று நாட்களுக்குள் கர்நாடகாவில் தங்கள் ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனங்களுக்கு மாநில போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆட்டோ சேவைகள் நிறுத்தப்பட வேண்டும், மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது" என்று துறையின் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசு நிறுவனங்கள் தங்கள் பதில் மற்றும் இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

2 கி.மீ.க்கும் குறைவான தூரம் கூட நிறுவனங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக பல பயணிகள் மாநில அரசுக்கு புகார் தெரிவித்தனர். விதிமுறைகளின்படி, ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் 2 கி.மீட்டருக்கு 30 ரூபாயும், அதன்பின் ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாயும் வசூலிக்கத் தகுதியுடையவர்கள். டாக்சிகளுக்கு மட்டுமே விதிகள் இருப்பதால், இந்த நிறுவனங்கள் ஆட்டோ ரிக்‌ஷாக்களை இயக்க தகுதியற்றவை என்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு விதிமுறைகளை மீறி ஆட்டோரிக்ஷா சேவைகளை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது துறையின் கவனத்திற்கு வந்துள்ளது என்று போக்குவரத்து ஆணையர் டி.எச்.எம்.குமார் தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்கள் சொந்த மொபைல் பயன்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் செயலி அடிப்படையிலான பயண திட்டத்தை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர். "நம்ம யாத்ரி" செயலி நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via