ரயில்வே துறை ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான போனஸ் வழங்க ஒப்புதல்

மத்திய அரசின் கீழ் செயல்படும் ரயில்வே துறை ஊழியர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பத்து 10, 91,146 ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 1865.68 கோடி செலவாகும். பொதுவாக ஆண்டு தோறும் ரயில்வே ஊழியர்களுக்கு துர்கா பூஜை தசரா விடுமுறைக்கு முன்னர் இந்த போனஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :