கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விபத்து 4 மாணவ,மாணவிகள் பலி .

by Editor / 25-11-2023 10:09:52pm
கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விபத்து 4 மாணவ,மாணவிகள் பலி .

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள CUSAT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த மாணவர்கள் களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். இரண்டு சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டபோது இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் 60 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்.
.
முதல்வர் பினராயி விஜயன் X இல் பதிவிட்டுள்ளார், “எர்ணாகுளத்தில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒட்டுமொத்த மாநிலமும் அதிர்ச்சியில் உள்ளது. உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உடனடி மற்றும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து ஆகியோர் எர்ணாகுளம் புறப்பட்டு நிலைமையை நேரடியாக ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை தாமதமின்றி தொடங்கும்” என்றார்.

 

Tags : கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விபத்து 4 மாணவ,மாணவிகள் பலி .

Share via