அரச மரத்தை எந்த கிழமையில் வழிபட்டால் பலன் கிடைக்கும்!

by Editor / 24-07-2021 12:05:14pm
அரச மரத்தை எந்த கிழமையில்  வழிபட்டால்  பலன் கிடைக்கும்!

எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்.

அரச மரத்தை ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால் தீராத நோய் தீரும். திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் இந்நாளில் விரதம் இருந்து அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் இன்னும் சிறப்பாகும்.

செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால், செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷங்கள் விலகும்.

புதன்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வந்தால், வியாபாரம் பெருகும்.

வியாழக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வந்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்.

சனிக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்து வணங்கினால், வறுமை நீங்கி மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.

எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. மூன்று முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். ஐந்து முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைத்து, வம்சம் விருத்தியாகும். பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் வந்துசேரும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

அரச மரத்தை எந்த கிழமையில்  வழிபட்டால்  பலன் கிடைக்கும்!
 

Tags :

Share via