குழந்தையை கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை

by Editor / 11-07-2025 01:59:11pm
குழந்தையை கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை

 ஷார்ஜாவில் தனது குழந்தையைக் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். கேரளாவின் கொல்லம், கொட்டாரக்கரையைச் சேர்ந்த விபஞ்சிகா, அவரது குழந்தை வைபவி ஆகியோர் ஷார்ஜாவில் உள்ள அவர்களது குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர். விபஞ்சிகா தனது தாய்க்கு அனுப்பிய ஆடியோவுடன் கொல்லம் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாக விபஞ்சிகா உருக்கமாக பேசியுள்ளார். கணவர் நிதிஷ் தொடர்ந்து சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags :

Share via