சேலம் மாவட்டத்தில் 2 லட்சம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை

by Staff / 01-03-2023 05:21:12pm
சேலம் மாவட்டத்தில் 2 லட்சம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை

நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்த நிதி வழங்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டா லும், 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு நேர டியாக செலுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில். இந்த திட்டத்தின் 13-வது தவணையாக ரூ. 16, 800 கோடியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) விடுவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் கிடைத்துள்ளது. ஹோலி பண்டிகை மற்றும் குறுவை அறுவடையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 1. 75 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விவசாய தேவைகளுக்காக தலா ரூ. 2 ஆயிரம் வீதம் உதவித்தொகை அவர்க ளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் 11 மற்றும் 12-வது தவணை நிதி கடந்த ஆண்டு முறையே மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டன. கிராமப்புற வளர்ச்சிஇந்த திட்டத்துக்காக இதுவரை ரூ. 2. 25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டு இருப்பதாக அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது. கிராமப்புற பொருளா தார வளர்ச்சி, விவசாயிக ளுக்கு கடன் தடைகளைத் தளர்த்துதல், விவசாய முதலீடுகளை உயர்த்தியது போன்ற பயன்களை இந்த திட்டம் வழங்கியிருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, விவசாயிகளின் இடர் நீக்கும் திறனை அதிகரித்து, அதிக உற்பத்தி முதலீடுகளுக்கு வழிவகுத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo