பெரியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை

சமூகநீதி போராளி என போற்றப்படும் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் இன்று (செப் 17) சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஈ.வே. ராமசாமியின் திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக தவெக சார்பில் பெரியார் திடலில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று மரியாதை செய்திருந்தார்.
Tags :