இன்ஸ்டாகிராமில் பழகி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய அழகிகள் கைது
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ராகுல் ரத்தோருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆயுஷி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் மணிக்கணிக்கில் வீடியோ காலில் பேசிய நிலையில், சமீபத்தில் ராகுலை நேரில் சந்திக்க வருமாறு ஆயுஷி அழைத்துள்ளார். இதை நம்பி சென்ற ராகுலை, ஆயுஷி உள்ளிட்ட 6 பேர் கடத்திச் சென்று ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் அளிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர். புகாரின்பேரில் அனைவரும் கைதாகினர்.
Tags :



















