நெல்லை தி.மு.க உறுப்பினர்களை பாராட்டி அ.தி.மு.க சார்பில் பரபரப்பு சுவரொட்டி

நெல்லை மாநகராட்சி புதிய மேயராக ராமகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்கவுள்ள நிலையில், நெல்லை மாநகரம் முழுவதும் அ.தி.மு.க-வினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த போஸ்டறில் "திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்வில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக வாக்களித்த திருநெல்வேலி மாநகராட்சியின் தி.மு.கவின் 20 மாமன்ற உறுப்பினர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என திருநெல்வேலி தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல தலைவர் எஸ் எஸ் அன்பு அங்கப்பன் அடித்து ஒட்டிய சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : நெல்லை திமுக உறுப்பினர்களை பாராட்டி அதிமுக சார்பில் பரபரப்பு போஸ்டர்கள்