பிறந்த 5 நாட்களே ஆன குழந்தையை கடத்திய பொறியியல் பெண் பட்டதாரி கைது 

by Editor / 10-08-2024 10:28:12am
பிறந்த 5 நாட்களே ஆன குழந்தையை கடத்திய பொறியியல் பெண் பட்டதாரி கைது 

சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று (ஆக.9) காணாமல் போன பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை, 15 மணிநேரத்தில் சேலம் அருகேயுள்ள காரிப்பட்டியில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து மீட்டனர். தனக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்பதால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திச் சென்றதாக  பொறியியல் பட்டதாரியான வினோதினி என்ற இளம்பெண் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவரை அடையாளம் கண்டு குழந்தையை காவல் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

 

Tags : பிறந்த 5 நாட்களே ஆன குழந்தையை கடத்திய பொறியியல் பெண் பட்டதாரி கைது 

Share via