பாராளுமன்ற நட்புறவுக்குழு அமைப்பு

by Admin / 24-02-2026 10:46:14am
பாராளுமன்ற நட்புறவுக்குழு அமைப்பு

இந்திய பாராளுமன்ற நட்புறவு குழு அமைப்பு. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த குழுவை அமைத்து அறிவித்துள்ளார். மற்ற நாடுகளில் நாடாளுமன்றங்களுடன் உறவை வலுப்படுத்தவும் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெறுவர். 22 உறுப்பினர்கள் கட்சியின் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து இடம் பெறுவர். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இரு கட்சியைச் சார்ந்தவர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ப .சிதம்பரம் ,கனிமொழி கருணாநிதி, டி. ஆர். பாலு போன்றோரின் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மற்ற நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக பேசி சட்டம் இயற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் வர்த்தகம் தொழில்நுட்பம் சமூகக் கொள்கை மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், ஆய்வு பயணங்கள், கருத்தரங்குகள் மற்றும் கூட்டு விவாதங்கள் மூலம் மற்ற நாடுகளில் சிறந்த நாடாளுமன்ற நடைமுறைகளை கற்று அறிதல் இந்த நட்புறவு குழுக்கள் இந்திய நாடாளுமன்ற குழுவின் தன்னாட்சி அமைப்பாக செயல்படும்.

பாராளுமன்ற நட்புறவுக்குழு அமைப்பு
 

Tags :

Share via