கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த மூன்றாவது ஆய்வு கூட்டம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த மூன்றாவது ஆய்வு கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து ஏற்கனவே இரண்டு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முன்னேற்பாடு பணிகளின் நிலை குறித்து துறைகள் வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Tags : கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த மூன்றாவது ஆய்வு கூட்டம்.