ரயில் நிலையத்தில்  ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பாதுகாப்பு படையினரால் பறிமுதல். 

by Editor / 07-12-2024 08:13:33am
ரயில் நிலையத்தில்  ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பாதுகாப்பு படையினரால் பறிமுதல். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு ஆரோக்கியதாஸ் என்பவர் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில், ஆரோக்கியதாஸ் உடைமைகளில் ரூ.75 லட்சம் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பணத்தை ரயிலில் கடத்திச் செல்ல முயன்றதாக ஆரோக்கியதாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags : ரயில் நிலையத்தில்  ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பாதுகாப்பு படையினரால் பறிமுதல். 

Share via