9 வயது மாணவன்குமரியிலிருந்து சென்னைக்கு 10 நாளில் 750 கி.மீ. தொடர் ஓட்டம்

by Editor / 03-10-2021 05:22:08pm
9 வயது மாணவன்குமரியிலிருந்து சென்னைக்கு 10 நாளில் 750 கி.மீ. தொடர் ஓட்டம்

மேற்கு தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் பள்ளி மாணவன் சர்வேஷ், இன்று காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலையிலிருந்து தொடங்கி சென்னை நோக்கி புறப்பட்டான். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சர்வேஷை ஊக்குவிக்கும் வகையில் சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து கலந்து கொண்டு ஓட்டம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சாய்ராம் கல்விக் குழும அறங்காவலர்கள் முனுசாமி, சதீஷ்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் தொடங்கி, தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளின் வழியாக 10 நாட்களில் 750 கி.மீ. தனது தொடர் ஓட்டத்தின் முடிவில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை அடைகிறான் சர்வேஷ்.

இந்த பயணத்தில் சர்வேஷ் ஐக்கிய நாடுகளின் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இருக்கிறார். இதை தவிர தமிழகத்தில் அவரது பயண தடத்தில், அவர் 2 லட்சம் விதை உருண்டைகளை வழிநெடுகிலும் விதைக்க இருக்கிறார். அவர் மேற்கொள்ள இருக்கும் இச்செயல் இதுவரை யாரும் செய்யத் துணியாத ஒரு செயலாக எந்த சாதனை பட்டியலிலும் இடம் பெறாத ஒரு செயலாக கருதப்படுகிறது.

9 வயதே ஆன சர்வேஷ், தடகள வீரர் ஆவார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் படித்து கொண்டு பல்வேறு தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 146 பதக்கங்கள், 62 பரிசுகள், 256 சான்றிதழ்கள், 16 ரொக்கப் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளான். 1 கி.மீ. தூரம் பின்னோக்கி ஓட்டத்தில் 2017ஆம் அண்டு 5 வயதில் இந்தியளவில் சாதனை படைத்துள்ளான். 6 வயதில் 486 கி.மீ. தூரத்தை கடந்துள்ளான்.

 

Tags :

Share via