பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வு

by Editor / 03-10-2021 05:19:37pm
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வு

சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம், கோயம்பேடு காற்கறி அங்காடியில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுற்று சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுப்ரியா சாஹூ, அரசு முதன்மை செயலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்தபட வேண்டிய பொருட்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, உத்கர்ஷ் குளோபல் ஃபவுண்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சுமார் 5 ஆயிரம் துணிப்பைகள் வழங்கப்பட்டன.

அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து கண்காட்சி வைத்தும், விழிப்புணர்வு வாகனம் மூலம் கானொளிக்காட்சி வாயிலாகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.

 

Tags :

Share via