இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தெலங்கானா விமான நிலையத்தில் இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. 6E897 என்ற விமானம் பெங்களூரில் இருந்து புறப்பட்டது, ஆனால் ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு காலை 6:15 மணிக்கு தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Tags :



















