முதல்வர் பழனிசாமிக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை

by Editor / 30-06-2021 03:52:29pm
முதல்வர் பழனிசாமிக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை


 


குடலிறக்க அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். 
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நள்ளிரவு ஊரடங்கு, ஞாயிறு கிழமை லாக்டவுன் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி தற்போது அறுவைச்சிசிக்சை முடிந்து நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளால் அறுவை சிகிச்சையை முதல்வர் பழனிசாமி ஒத்திப்போட்ட நிலையில் தேர்தல் முடிந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories