மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

by Admin / 30-01-2022 11:30:31am
 மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்


பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
 
இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இது 85-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்திஜியின் நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இதனால் காலை 11.30 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
 
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கருத்துகளை குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

 

Tags :

Share via

More stories