நான் முதல்வன் திட்டத்தால் வெற்றி.. UPSC வென்ற தமிழன் பெருமிதம்

by Editor / 22-04-2025 05:10:47pm
நான் முதல்வன் திட்டத்தால் வெற்றி.. UPSC வென்ற தமிழன் பெருமிதம்

கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி நடைபெற்ற UPSC தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர் சங்கர் பாண்டியராஜ் அகில இந்திய அளவில் 23 வது இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து சங்கர் கூறுகையில், "தமிழில் புரிதலுடன் படித்து வெற்றி அடைந்துள்ளேன். நான் முதல்வன் திட்டத்தில் கொடுத்த நிதிஉதவி மற்றும் பயிற்சியாளர்களின் ஒத்துழைப்பு காரணமாக 8 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி கிடைத்துள்ளது. நான் முதல்வன் திட்டமே எனது வெற்றிக்கு காரணம்" எனவும் தெரிவித்தார். 
 

 

Tags :

Share via