ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு.. 7 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பைசரான் பள்ளத்தாக்கில் இன்று(ஏப்.22) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் சென்றபோது திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளார். பின் அவர் அங்கிருந்து தப்பிய நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் காயமடைந்த சுற்றுலாப்பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :