அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி மரணம்

by Editor / 22-04-2025 05:04:41pm
அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி மரணம்

சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் அந்தியூர் அருகே பழைய மேட்டூர் பகுதியில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via