இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: மழையால் தடை

by Staff / 16-10-2024 05:16:39pm
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: மழையால் தடை

நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்.16) காலை 9:30 மணிக்கு பெங்களூருவில் தொடங்க இருந்தது. ஆனால் காலை முதலே பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாளை காலை 8:45 மணிக்கே டாஸ் போடப்பட்டு 9:15 மணிக்கு போட்டி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

Tags :

Share via