சாப்பிடுவதில் கவனம்

by Admin / 30-10-2021 08:28:43pm
சாப்பிடுவதில் கவனம்

 

        நொறுங்க தின்றால் நூறு ஆயுசு என்று பழமொழி உண்டு. இன்றைக்கு நாம் அதிகமாக நோய்க்கு ஆட்படுவதே உணவு பழக்க வழக்கம் தவறியதன் விளைவே

         இன்றைய அவசர உலகில் ஆர அமர சாப்பிடுகிற பழக்கம் என்பது இல்லாமல் போய்விட்டது. நின்று கொண்டே சாப்பிடுகிறோம். நடந்து கொண்டு சாப்பிடுகிறோம். ஏன் ஓடிக் கொண்டே சாப்பிடுகிறோம். அவசர அவசரமாக நேரம் ஆகிவிட்டது பஸ்ஸை பிடிக்க வேண்டும்ரயிலைப் பிடிக்க வேண்டும். ஆயிரம் இப்பொழுது பயோமெட்ரிக் என்றே ஓடுகிறேமே தவிர உட்கார்ந்து நிதானமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவை சம்மனமிட்டு ஒரு அரைமணி நேரம் ருசித்து சாப்பிடுகிற பழக்கமில்லாது யோய்விட்டது. ஆட்டோ வந்துவிடும் என்று குழந்தைகளுக்கு அவசர அவசரமாக வாயில் உணவத் தணிந்து விடும் பெற்றோர்

          செல்போனில் வாட்ஸ்ஆப் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே உணவை பாராமல் அள்ளி வாயில் திணிக்கும் அலட்சியம்..

          உணவு என்பது உயிர் வாழ்தலுக்கு அடிப்படையானது. தினம் சாப்பிடுவது தானே உள்ளது அந்த உணவு எப்படி வந்தது என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.. நாம் சாப்பிடும் உணவு.. எத்தனை எத்தனையோ விதமான தானியங்களின்பொருள்களின் கலவை..

          எங்கெங்கோ விளைந்துஉற்பத்தியாகி நம் சமையல் கூடத்தில் தயாராகி நமக்கு உணவாகப் பரிமாறிப்படுகிறது.

          பருப்பு ஒரு பக்கம்தனியாமிளகாய்மஞ்சள்இஞ்சி, பூண்டு, சீரகம், உப்பு.. கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், முருங்கை என எல்லாம் பல்வேறு பகுதிகளில் விளைந்து ஒரே இடத்திற்கு வந்து விற்பனையாகிநம் வீட்டுக்குள் வந்து சமையல் கூடத்தில் உணவு எனும் அமுதாக வார்க்கப்படுகின்றது. இவ்வளவு படிநிலையில் காய்கறிகளும் தானியங்களும் உணவாகக் சமைக்கின்றது என்பதை உணர்ந்தால் நாம் உணவை வீணாக்க மாட்டோம்அதை ரசித்து ருசித்துச் சாப்பிடுவோம்.

         சாப்பிடும் பொழுது பேசக் கூடாது. உணவுக் குழாயும் மூச்சுக் காற்றுச் செல்லும் குழாயும் ஒரே நேரத்தில் திறந்தால் உணவு இரைப்பைக்குள் செல்லமால். மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குச் சென்று விடும். நெஞ்சடைத்து போவது இதனால்தான் ஏற்படுகிறதுசாப்பிடும்பொழுது சாப்பாட்டில் மட்டுமே குறியாக இருக்க வேண்டும்அதற்காகத் தானே இத்தனை ஓட்டம்

  1. பசிக்க..பசிக்க சாப்பிடுங்கள் உணவு அமுதாக ருசிக்கும்
  2. நன்றாக மென்று சாப்பிடுங்கள்.. அசை போட்டுச் சாப்பிடாதீர்கள்.
  3. தரையில் அமர்ந்து சம்மனமிட்டு சாப்பிட்டால் வயிற்றுக்குள் உணவு நிதானமாகச் சென்று சேரும்.
  4. இடை இடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பது நன்று.
  5. சாப்பிடும் முன் பழம் சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதால் உணவிற்கு முன் பழங்கள் சாப்பிடுங்கள்.
  6. தண்ணீரை மட மட வென்று குடிக்காதீர்.. வாயை அகலத்திறந்தும் குடிக்காதீர்காற்று உள்ளே புகலாம்.. இதனால், வாயுதொல்லை பிரச்சனைகள் உருவாகும்.
  7. இனிப்பு காரப் பொருள்கள்எண்ணெயில் கடலைமாவுமைதா போன்றவற்றில் தயார் செய்யப்படுவதுஇதைச் சாப்பிட்டவுடன் பழவகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  8. பிரியாணி சாப்பிட்டுவிட்டு டீ குடிக்கலாம்…. குளிர்பானம் பருகலாம்ஐஸ்கிரீம் அறவே கூடாதுபிரியாணியில் நெய்யும் புரதக் கொழுப்பு நிறைந்திருப்பதால் நெஞ்சு அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
  9. கூடுமானவரை வெந்நீரை குடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்..குளிர்ந்த நீர் பருக அமுதாக இருக்கும்.. ஆனால், நுரையீரலுக்கு ஆபத்தை உண்டாக்கும்
  10. காலை அதிகமாகச் சாப்பிடலாம். இருந்தால் மதியத்தில் அதிகமாகச் சாப்பிடலாம். இரவில் கால்பங்கு உணவுகால் பங்கு தண்ணீர்கால்பங்கு வெறும் வயிறுடன் விட்டுவிட வேண்டும்.
  11. மாமிச உணவு வகைகளை இரவில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அளவோடு சாப்பிட வேண்டும்
  12. கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இந்த மூன்றில் சமைத்த உணவை உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  13. மரபணு மாற்றப்பட்ட பழம், காய்கறிகளை உண்பது பெரும் தீங்கை விளைவிக்கும்.. நம் நாட்டில் விளையும் பழக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் நம் சீதோஷ்ண நிலைக்கு உட்பட்டவைஅவற்றை உண்பதால் எந்த வித கெடுதலும் ஏற்படாது.

 

 

Tags :

Share via