பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது.ஆர்.எஸ்.பாரதி

by Staff / 03-07-2024 03:52:32pm
பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது.ஆர்.எஸ்.பாரதி

நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு வைத்துக்கொள்வார்கள். இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப்படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை. எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. குலம், கோத்திர பெருமையால் டாக்டர் ஆகவில்லை. சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் எங்களில் பலர் மருத்துவர் ஆகினர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது. எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்குத்தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வு வந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி நடத்திய போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இவ்வாறு பேசியுள்ளார்.

 

Tags :

Share via

More stories