டாஸ்மாக் ஊழியர்களால் அதிகவிலைக்கு விற்பனை செய்ய பதுக்கப்பட்ட 36 அட்டை பெட்டி, பீர், பிராந்தி பறிமுதல் 6பேர் மீது வழக்கு.

by Editor / 29-11-2021 03:49:53pm
டாஸ்மாக் ஊழியர்களால் அதிகவிலைக்கு விற்பனை செய்ய பதுக்கப்பட்ட 36 அட்டை பெட்டி, பீர், பிராந்தி  பறிமுதல் 6பேர் மீது வழக்கு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கு அரசு மதுப்பானகடை தவிர அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் ஏராளமான பெட்டிகளில் மது பானங்களைப் பதுக்கி வைத்து, டாஸ்மாக் கடை செயல்படாத நேரங்களில் பகல், இரவு பாராமல் டாஸ் மாக் ஊழியர்கள் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்துள்ளனர் . இது குறித்த தகவலின் பேரில் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் , ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடையின் அருகிலுள்ள கடையில் சோதனை நடத்தினர். 
அப்போது, அங்கு 36 அட்டை பெட்டிகளில் பீர், பிராந்தி என 1188 மதுபான புட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் என கூறப்படுகிறது.இவற்றை  பறிமுதல் செய்த போலீசார் , கடை மேற்பார்வையாளர் ஆலங்குளம் அருகேயுள்ள லட்சுமியூர் தங்கசாமி மகன் முருகன்(48) மற்றும் கடை விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.சம்பவம் மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தி உள்ளது.மதுப்பாட்டில்களை இந்த அளவுக்கு பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 6பேர் மீது காவல்துறையினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளளது.

டாஸ்மாக் ஊழியர்களால் அதிகவிலைக்கு விற்பனை செய்ய பதுக்கப்பட்ட 36 அட்டை பெட்டி, பீர், பிராந்தி  பறிமுதல் 6பேர் மீது வழக்கு.
 
Tags :

Share via