தவெக கொடி: கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த்

by Staff / 22-08-2024 11:47:07am
தவெக கொடி: கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த்

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துக் கொண்டார். கொடியை அறிமுகப்படுத்தும் போது விஜய் அருகில் அமர்ந்திருந்த அவர் கண்ணீர் விட்டார். தொடர்ந்து அவரிடம் விஜய் பேசிக் கொண்டிருந்தார்.

 

Tags :

Share via