எந்த தனிநபரோ, நிறுவனமோ தப்பவே முடியாது பிரதமர் எச்சரிக்கை
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், 31-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதிவரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஊழலை சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா நடைபோட்டு வருகிறது. ஊழலில் ஈடுபடும் எந்த தனிநபரோ, நிறுவனமோ தப்ப முடியாது. ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல, வருங்காலத்திலும் எல்லா மட்டத்திலும் ஊழலுக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் நாடாக, வளர்ந்த நாடாக மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை" என்றுகூறியுள்ளார்.
Tags :



















