5 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.

by Staff / 14-01-2024 03:23:55pm
5 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.

மதுரை அருகே சிந்தாமணி ராஜமான் நகர் கண்மாய்க் கரை பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கீரைத்துறையைச் சேர்ந்த ராமையா மகன் சுப்பிரமணியன் (19), சந்துரு (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து இருவரையும் கைது செய்த கீரைத்துறை போலீசார், அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via
Logo